Skip to main content

Posts

தேனி புதிய கலெக்டரை சந்தித்த மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள்

தேனி, பிப்.18- தேனி மாவட்ட புதிய கலெக்டராக ரஞ்ஜீத் சிங் 13.2.2025 அன்று பொறுப்பேற்று கொண்டார். இதனைத் தொடர்ந்து புதிய கலெக்டரை தேனி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் உறுப்பினர்கள் மா.ஜெயப்பிரகாஷ், சு.நடராஜன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக தேனி மாவட்ட புதிய கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். நாகராஜ், முதன்மை நிருபர்  ............................

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் பணியாளர்களுக்கு ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் குடியிருப்பு கட்டிடம்: தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்

தேனி, பிப்.18- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து 17.2.2025 அன்று இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் குடியிருப்புக் கட்டிடம் கட்டுவதற்கு காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.  அதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்  சரவணக்குமார் ஆகியோர் கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணியினை துவக்கி வைத்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையிலான அரசு பொறுப்பேற்றத்தில் இருந்து இந்து சமய அறநிலையத்துறையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்ட செயலாக்கம், திருக்கோயில்களில் குடமுழுக்கு திருத்தேர்களை பழுதுபார்த்தல், திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், அன்னதானத் திட்டம் விரிவாக்கம், துறையின் செயல்பாடுகளை கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்ப...

தேனியில், இந்து எழுச்சி முன்னணி சார்பில் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு புகழஞ்சலி

  தேனி, பிப்.14- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் கடந்த 2019 ஆண்டு புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களின் நினைவாக, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் புகழஞ்சலி நிகழ்ச்சி தேனி  அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் அருகே 14.2.2025 அன்று  நடைபெற்றது. இந்த நிகழ்வில் தேனி மாவட்ட தலைவர் ராமராஜ், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, மலர் தூவி வீரவணக்கம் புகழஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து இந்நிகழ்வின் போது மாவட்ட துணைத்தலைவர்கள் சோலைராஜன், ரமேஷ், விஷ்வா பில்டர்ஸ் பாலமுருகன், மாவட்ட துணைச்செயலாளர்கள் சக்திவேல், சுப்பையா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கம்பம் மணி பிரபு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பாண்டியா பிள்ளை, தேனி நகர தலைவர் சிவராமன், நகர அமைப்பாளர் கனகுபாண்டி நகர பொருளாளர் நாகராஜ், நகர துணைத்தலைவர் சிவா, துணை செயலாளர் அழகுபாண்டி, நகரத் துணைச் செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ராம்குமார், சுரேஷ், பாலமுருகன், நகர...

தேனி மாவட்ட புதிய கலெக்டராக ரஞ்ஜீத் சிங் பொறுப்பேற்று கொண்டார்

தேனி, பிப்.13 - தேனி மாவட்ட கலெக்டராக இருந்து வந்த ஷஜீவனா அரசு கூடுதல் செயலாளராக பதவி உயர்வு பெற்று பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து சேலம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ரஞ்ஜீத் சிங் தேனி மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டார்.  இதனை அடுத்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் 13.2.2025 அன்று தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக ரஞ்ஜித் சிங், பொறுப்பேற்றுக் கொண்டார்.  இதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட கலெக்டர் தெரிவிக்கையில், நான் இன்று தேனி மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்று கொண்டுள்ளேன். எனது சொந்த ஊர் உத்திரப்பிரதேசம் மாநிலம் கான்பூர், 2016-ம் ஆண்டு இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று சேலம் மாநகராட்சி ஆணையாளராகவும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகவும் பணிபுரிந்துள்ளேன். அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதில் ஏற்படும் இடைவெளியை குறைத்தல், பழங்குடியினர் முன்னேற்றம் போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசின் நலத்திட்டங்கள் உரிய பயனாளிகளை சென்றடைவதும் உறுதி செய்யப்படும். பொதுமக்களை நேரில் சந்தித்து அ...

தேனியில், பா.ஜ.க தேனி மாவட்ட தலைவர் பி.ராஜபாண்டியன் பொறுப்பு ஏற்கும் விழா: மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் பங்கேற்பு

தேனி, பிப்.10 - தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவராக பி.ராஜபாண்டியன் கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட தலைவராக பி.ராஜபாண்டியன் பொறுப்பேற்கும் விழா தேனி வசந்த மஹாலில் 10.2.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் மாவட்ட தலைவர் பி.சி.பாண்டியன் தலைமை தாங்கினார். நகர தலைவர் ரவிக்குமார் வரவேற்றார். விழாவில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீனிவாசன், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள்,  கோட்ட அமைப்பு செயலாளர் ராம ராஜசேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.  விழாவில் பா.ஜ.க நிர்வாகிகள் சிவனந்தராஜா, அரசுமணி, ராமமூர்த்தி, பாலகிருஷ்ணன், லோகன்துரை, வெங்கடேஸ்வரன், இந்து முன்னணி தேனி வடக்கு மாவட்ட தலைவர் முருகன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் காசிமாயன் இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, தேனி மாவட்ட தலைவர் இராமராஜ் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்பட பா.ஜ.க மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தேனி மாவட்ட பா.ஜ.க தலைவர் பி.ராஜபாண்டியனுக்கு ம...

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி: தேனியில் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தேனி,பிப்.8- டெல்லி சட்டமன்றத்தில் உள்ள 70 இடங்களில் நடைபெற்ற தேர்தலில் 48 இடங்களை பிடித்து பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பா.ஜ.க முன்னிலையில் இருக்கும் போதே தேனி மாவட்ட மற்றும் நகர பா.ஜ.க சார்பில் தேனி நேரு சிலை அருகே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது தேனி மாவட்ட பா.ஜ.க தலைவர் ராஜபாண்டியன், தேனி நகர பா.ஜ.க தலைவர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் பா.ஜ.க-வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி டெல்லி சட்டமன்ற தேர்தல் வெற்றி பெற்றதற்கான மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வெற்றி கோஷங்கள் எழுப்பினார்கள்.  இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க நிர்வாகிகள் மலைச்சாமி, மணிகண்டன், விஜயகுமார், பாண்டியராஜன், செல்வேந்திரன், ஜெயமுருகன், மதிவாணன், முருகேசன், முத்துராஜா, கவிதா, மீனா உள்பட பா.ஜ.க பிரமுகர்கள், மகளிரணியினர், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நாகராஜ், முதன்மை நிருபர்   ...........................

தேனி பழைய பஸ் நிலையத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட நெகிழி குறித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா திடீர் ஆய்வு

  தேனி, பிப்.8- தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சி காமராஜர் பேருந்து முனையத்தில் உள்ள ஹோட்டல்கள், டீக்கடை பேக்கரி உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் காலாவதியான பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட நெகிழி குறித்து மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா 7.2.2025 திடீர் ஆய்வு மேற்கொண்டார். தேனி பழைய பேருந்து முனையத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட கலெக்டர் பேருந்து முனையத்திற்குள் அமைந்துள்ள கடைகளில் உணவுப் பொருட்கள் தரமானதாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து அதற்கு FSSAI சான்று உள்ளதா என்பதை உறுதி செய்தார். இதனைத்தொடர்ந்து பழைய பேருந்து முனையம் பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வில் மொத்தம் 15 கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் சுமார் 213 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.15 ஆயிரம் உணவு பாதுகாப்பு துறை மூலம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய 112 கிலோ அளவிலான நெகிழி பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2,0...

தேனியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்டத்தின் முப்பெரும் விழா: மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பங்கேற்பு

தேனி, பிப்.6- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தேனி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 11-வது ஆண்டு துவக்க விழா, 42-வது மாநில மாநாடு கலந்தாய்வு மற்றும் தேனி மாவட்ட பொதுக்குழு கூட்டம் என முப்பெரும் விழா தேனி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள வி.கே.வேலுச்சாமி மஹாலில் 6.2.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மாவட்ட தலைவர் தேனீ செல்வக்குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பெருமாள் மாநில இணைச்செயலாளர் காளிமுத்து, தேனி மாவட்ட கௌரவத் தலைவர் ஏ.எம்.ஆர்.ஆர். சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு வந்த அனைவரையும் தேனி மாவட்ட செயலாளர் திருவரங்கப்பெருமாள் வரவேற்றார். விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்  பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடந்து வந்த பாதை மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கி சிறப்புரை ஆற்றினார்.  அதுபோல விழாவில் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, திண்டுக்கல் மண்டல தலைவர் கிருபாகரன், மாநில தலைமை செயலாளர் ராஜ்குமார், மாந...

தேனியில், மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள்: மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தொடங்கி வைத்தார்

  தேனி, பிப்.6 - தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கான 4-வது மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகளை மாவட்ட  ஆர்.வி.ஷஜீவளா, சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் முன்னிலையில் 6.2.2025 அன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர்  பேசுகையில், குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் முதன்முறையாக தேனி மாவட்டத்தில் நடைபெறுகிறது. 2024-2025-கல்வி ஆண்டிற்கான 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கான 4-வது மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் 8.22025 முதல் 11.2.2025 வரை கால்பந்து வளைகோல் பந்து, கபடி, கோ-கோ, கையுந்து பந்து, கூடைப்பந்து, எறிபந்து, கைப்பந்து, பூப்பந்து, மேசைப்பந்து இறகுப்பந்த மற்றும் டென்னிஸ் முதலிய 12 வகையான குழு விளையாட்டுப் போட்டிகள் தேனி மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளன. இப்போட்டிகள் 6.2.2025 முதல் 8.2.2025 வரை மாணவியர்களுக்கும்  9.2.2025 முதல் 11.2.2025 வரை மாணவர்களுக்கும் நடைபெற உள்ளன. தமிழ...

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்

மதுரை, பிப்.3 - சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 2.2.2025 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென் மண்டல தலைவர் கட்டிக்குளம் மாணிக்கவாசகம் தலைமை தாங்கினார்.  ஆர்ப்பாட்டத்தில் முல்லைப்பெரியாறு வைகை பாசன கூட்டமைப்பு தலைவர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம்  ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கிப் பேசி சிறப்புரை ஆற்றினார். இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டன பேரூரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கௌரவ தலைவர் எம்.பி.ராமன்,  முல்லைப்பெரியாறு வைகை பாசன விவசாய சங்க  செயலாளர் எல் ஆதிமூலம், மாநில இளைஞரணி செயலாளர் மேலூர் அருண், மதுரை மண்டல தலைவர் மதுரைவீரன், செயலாளர்  உறங்காப்புலி, உயர் மட்டக் குழு உறுப்பினர்கள் எம்.எம்.முருகேசன், ஆபிரகாம், சிவகங்கை மாவட்ட தலைவர் தமராக்கி ராமலிங்கம், செயலாளர் தவம், விருதுநகர் ராஜாங்கம், ராமநாதபுரம் முத்துராமலிங்கம் உள்பட 100-க்...