தேனி, அக்.12- தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை 12.10.2024 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன், உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், வித்யாலயா பள்ளியின் செயலாளர் நவமணி, இணைச்செயலாளர்கள் அய்யன்மூர்த்தி, தீபக்கணேஷ், ஆகியோர் கலந்து கொண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினார்கள். இதனைத்தொடர்ந்து பள்ளியில் ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளில் சேர்ந்த மாணவ குழந்தைகளுக்கு கலைவாணி வாசம் கொள்ளும் நெல்லில் மாணவர்கள் அகரத்தை எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உறவின்முறை ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பள்ளி முதல்வர் பூரண செல்வி, துணை முதல்வர் அனுஷா மற்றும் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர் சேர்க்கை நிகழ்ச்சியை முன்னிட்டு சரஸ்வதி, லட்சுமி, சக்தி ஆகிய அம்மன்கள் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் சில கு...
News, Agri, Devotional, Political, Education, Sports, Development, Gerivence, Crime, Environmental, Technology, Information, Awareness, Festival,