தேனி எல்.எஸ். மில்ஸ் கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் 2-ம் ஆண்டு மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 3 நாட்களாக தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மாவட்ட அளவில் இருந்து 20 அணிகள் கலந்து கொண்டன. நாக்-அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் நடைபெற்ற இப்போட்டியில் லீக் சுற்றுக்கு பெரியகுளம் சில்வர் ஜுபிலி அணி, பாப் அணி, தேனி எல்.எஸ்.மில்ஸ் அணி, கம்பம் பென்னிகுவிக் அணி தகுதி பெற்றது. இதில் லீக் சுற்றின் இறுதி ஆட்டத்தில் பெரியகுளம் பாப் அணி, தேனி எல்.எஸ்.மில்ஸ் அணியை 95:90 என்ற புள்ளி கணக்கில் வென்று முதலிடத்தை பிடித்தது. அதனைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தேனி எல்.எஸ் மில்ஸ் நிர்வாக இயக்குநர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலைவர் சிதம்பரசூரியவேலு, துணைத்தலைவர் டாக்டர் செல்வராஜ், தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழக பயிற்சியாளர் கமிட்டி மற்றும் தேர்வுக்குழு தலைவர் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எல்.எஸ்.மில்ஸ் கூடைப்பந்தாட்ட கழக உபதலைவர் ராமராஜ் வரவேற்றார். விழாவில் தேன...
News, Agri, Devotional, Political, Education, Sports, Development, Gerivence, Crime, Environmental, Technology, Information, Awareness, Festival,