Skip to main content

Posts

Showing posts from December, 2023

தேனி மாவட்டத்தில் 4 நகராட்சி, 2 பேரூராட்சிகளில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 1,512 கோரிக்கை மனுக்கள்

தமிழ்நாட்டில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, அரசின் சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுமக்களுக்கு தீர்வு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோயம்புத்தூர், எஸ்.என்.ஆர். கல்லூரியில், "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை 18.12.2023 அன்று தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் முகாம் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள தேனி-அல்லிநகரம் நகராட்சி பொம்மையகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள டி.சி.ஏ மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் மனுக்கள்  பதிவு செய்யும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முரளி, தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பாலமுருகன், நகர அமைப்பு அலுவலர் சலார் அப்துல் ...

தேனியில் சிறுதானிய உணவு திருவிழா: கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தேனி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 14.12.2023 அன்று சிறுதானிய உணவுத் திருவிழா தேனி என்.ஆர்.டி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமை தாங்கி தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி அவர்கள் முன்னிலை வகித்தார்.  இந்த உணவு விழாவானது ஐ.நா. சபையால் 2023-ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பொதுமக்களாகிய நுகர்வோர்கள் இடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் உணவுத்திருவிழா நடத்த வேண்டும் என அறிவித்ததை தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் உணவுத்திருவிழா நடைபெற்றது. நம் முன்னோர்கள் சிறுதானியங்களை அதிகமாக எடுத்துக்கொண்டதன் காரணமாகவும், உணவே மருந்து என்ற அடிப்படையில் அவர்களது வாழ்க்கை முறையினை அமைத்து கொண்டதன் காரணமாகவும் 100 ஆண்டுகள் நோய் நொடியில்லாமல்  வாழ்ந்தனர். நவீன கால மாற்றம் காரணமாக நமது பாரம்பரிய உணவு பழக்கங்கள...

பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகத்திற்கு நகராட்சி கவுன்சிலர் ஓ.சண்முகசுந்தரம் கண்டனம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கடந்த 5.12.2023 நள்ளிரவில் மின் கசிவின் காரணமாக பிரசவ பண்டுவ அறையில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதன் காரணமாக அங்கு சிகிச்சையில் இருந்த சுமார் 25 கர்ப்பிணி தாய்மார்கள் பச்சிளம் குழந்தைகளுடன் அங்கிருந்து அவசரகதியில் வெளியேற்றப்பட்டு வேறொரு வார்டுக்கு மாற்றப்பட்டதால் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் உயிர் தப்பியுள்ளனர்.  பணி மருத்துவர் இல்லாத நிலையில் பணியில் இருந்த செவிலியர் கங்காதேவி மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து, தீயை அணைக்கும் முயற்சியில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த செய்தியை வெளியில் தெரியாமலும் கண்டிப்பு செய்து மருத்துவமனை நிர்வாகம் உண்மையை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்களின் (நோயாளிகளின்) உயிரோடு விளையாடும் மருத்துவமனை நிர்வாகத்தின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.  பொதுமக்களின் (நோயாளிகளின்) நலனை காக்க வேண்டிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனையில் முறையாக மின் பராமரிப்பு மற்றும் மின்சாதனங்களை கையாளாததன் காரணமாகவே இந்த தீ விபத...

தேனியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா: ரூ.12.08 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

                                                                        தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா 5.12.2023 அன்று மாவட்ட ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் சட்ட மன்ற உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவேற்றும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகளை புரிந்து கொள்வதற்கும், அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை எளிதில் கொண்டு சேர்ப்பதற்காக இந்த தரவுகள் பயன்படுத்தப்பட உள்ளது.   பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள  Rights என்ற செயலியில் இந்த சமூக தரவுகள் பதிவேற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  எனவே மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு கணக்கெடுப்பிற்கு வருக...

சென்னையில் சுகாதார பணிகள் மேற்கொள்ள தேனியில் இருந்து புறப்பட்டு சென்ற துப்புரவு பணியாளர்கள்

சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 6 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்ட பகுதிகளில் மழை நீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்த மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய சென்னை மாநகராட்சி நிர்வாகம் உள்பட அந்தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினரும்  நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் சுகாதார பணிகள் மேற்கொள்ள துப்புரவு பணியாளர்கள் களப்பணிக்கு புறப்பட்டு சென்றனர். இதில் தேனி மாவட்டத்தில் உள்ள தேனி அல்லிநகரம், பெரியகுளம், போடிநாயக்கனூர்,சின்னமனூர், கம்பம் கூடலூர் ஆகிய 6 நகராட்சி பகுதிகளில் இருந்து துப்பரவு பணியாளர்கள் தேனி –அல்லிநகரம் நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட துப்பரவு பணியாளர்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு துப்புரவு களப்பணிகள் மேற்க...