Skip to main content

Posts

Showing posts from March, 2026

மதுரை-திருநகர், சொர்ணம் காலனி பகுதியில் குண்டும் குழியுமான புழுதி சாலையால் பொதுமக்கள் அவதி: மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மதுரை, மார்ச்.13- மதுரை மாநகராட்சி, திருநகர் சொர்ணம் காலனி பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடபடாததால் அப்பகுதி புழுதி களமாக காட்சியளிப்பதுடன் குண்டும், குழியுமான சாலையாக அப்பகுதி மாறிவிட்டது.  இதனால் அப்பகுதி மக்கள் குறிப்பாக முதியவர்கள் குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாக வேண்டி இருக்கிறது. இதில் வாகன ஓட்டிகளுக்கு சில நேரங்களில் சிறு சிறு விபத்துக்கள் கூட ஏற்பட்டு விடுகிறது.  எனவே பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை சீரான முறையில் மூடி சாலைகள் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  ............................. நாகராஜ், தலைமை நிருபர்  

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை வணிகமாக்கும் அறநிலையத்துறை; பாஜக சார்பில் மனு கொடுக்கும் போராட்டத்தால் திடீர் பரபரப்பு

தேனி, மார்ச்.9- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற மே 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 8 நாட்கள் முக்கிய திருவிழா நடைபெற உள்ளது.  இந்த திருவிழாவிற்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தவும், திருவிழாவை காணவும் தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வர். திருவிழாவை காண வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக எந்திர ராட்டினம் ஏலம் விடப்படுகிறது. இந்த எந்திர ராட்டத்திற்கான ஏலத்தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  இதனால் ராட்டினம் ஏறும் பொதுமக்களுக்கும் ராட்டினம் கட்டணமும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  இந்நிலையில் இந்த ஆண்டு ராட்டினம் இயக்குவதற்கான புதிய நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் எந்திர ராட்டினம் இயக்குவதற்கான ஏலத்தை எடுப்பதற்கு ஒப்பந்ததாரர்கள் யாரும் முன் வராமல் ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேனி மாவட்ட தலைவர் இராஜபாண்டியன் தல...

தேனியில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கு

தேனி, மார்ச்.5- தேனியில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊடக தகவல் மையத்தின் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு 4.3.2026 அன்று தேனி இன்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெற்றது.  பயிலரங்கு நிகழ்வை மத்திய தகவல் ஒளிபரப்பு துறையின் தென் மண்டல பொது இயக்குனர் வி.பழனிச்சாமி ஐ.ஐ.எஸ்., தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்விற்கு வந்த அனைவரையும் மத்திய ஊடக தகவல் மையத்தின் சென்னை இயக்குனர் பி. அருண்குமார், ஐ.ஐ.எஸ் வரவேற்றார். இதனைத்தொடர்ந்து பயிலரங்கில் மதுரை மண்டல தொழிலாளர் நல ஆணையாளர்  பிரவீன் பாண்டி மோகன்தாஸ் தொழிலாளர் வரன்முறை சட்டங்கள் சம்பந்தமான தகவல்களை தெரிவித்து பேசினார். இதனை அடுத்து போடியில் உள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் நறுமண வாரியத்தின் துணை இயக்குனர் (மார்க் கட்டிங்) செந்தில்குமரன் நறுமண பொருட்கள் சார்ந்த எதிர்கால வேலை வாய்ப்புகள்' என்ற தலைப்பில் இந்தியாவில் விளையும் நறுமணப் பொருள்கள் சம்பந்தப்பட்ட தரவுகளையும், அது சார்ந்த உள்நாடு, வெளிநாடு அளவிலான தொழில் வாய்ப்புகள் சம்பந்தமான விஷயங்களை சொல்லி விளக்கமாக பேசினார். இதனைத்தொடர்ந்து ஊடகம் சார்ந்த தகவல்கள் ம...