தேனி, ஜன.2-
தேனி மாவட்ட கோர்ட்டு அருகே உள்ள எம்.கே.எம் சட்ட அலுவலகம், வினோரா லா அசோசியேட்ஸ் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர், மக்கள் வழக்கறிஞர் MKM.முத்துராமலிங்கம் பிறந்த நாள் விழா 2.1.2025 அன்று கொண்டாடப்பட்டது. விழாவின் போது தேனி வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் நாணயம் சிதம்பரம் MKM முத்துராமலிங்கம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் தேனி செல்வகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர் திருவரங்க பெருமாள், மாவட்ட பொருளாளர் அருஞ்சுனை கண்ணன், வணிகர் சங்க நிர்வாகிகள் விஷூவல் பிரபு, ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் அவர்களுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அதுபோல வினோரா பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் டாக்டர் வி.ஆர்.ராஜன் வக்கீல் MKM.முத்துராமலிங்கம் அவர்களுக்கு ஏலக்காய் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதேபோன்று தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மக்கள் வழக்கறிஞர் எம்.கே.எம். முத்துராமலிங்கம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகள் வழங்கி, பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
...............................




Comments