Skip to main content

தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் புகையில்லாத போகிப்பண்டிகையை கொண்டாட வேண்டும்: மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வேண்டுகோள்


தேனி, ஜன.13-
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆனால் தற்பொழுது பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு, விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. மேலும், நச்சு புகைமூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நச்சுப்புகை கலந்த பனி மூட்டத்தால் சுகாதார பாதிப்பும், சாலை போக்குவரத்திற்கும் தடை ஏற்படுகிறது.

இதனை தவிர்க்கும் விதமாக. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் கடந்த வருடங்களில் பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது.

எனவே, இந்த வருடமும் ஏற்படுத்தாத பொதுமக்கள் அனைவரும் சுற்றுச்சூழலுக்கு மாசு வகையில் போகிப்பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
..............................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments