தமிழகத்தில் மது குடிக்க உரிமம் இல்லாதவர்களுக்கு; மது விற்க தடை கோரி சீர்மரபினர் நலச்சங்கத்தினர் தேனி கலெக்டரிடம் மனு
தேனி,டிச.23-
தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங்கிடம் சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் வக்கீல் கவுதமன் தலைமையில், மாநில செயலாளர்கள் ஜெயபால்,ஜெயக்குமார் ,மகளிர் அணி தலைவி விஜயலட்சுமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் அபினேஷ், இளைஞரணி நிர்வாகிகள் விருமாண்டி, சூர்யபிரகாஷ், நவீன், நதீஷ்குமார் ஆகியோர் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனங்கள் மது குடிக்க உரிமம் இல்லாதவர்களுக்கு மது விற்க அதிகாரமில்லை. தமிழகத்தில் மதுவிலக்கு சட்டம் 1937 முதல் (1971 முதல் 1974 ஆண்டுகள் தவிர) தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. அந்த சட்டத்தின் விதிகளின் படி மதுவை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்தவதற்கும், உபயோகப்படுத்துவதற்கும், முறையான உரிமம் அவசியம். சரத்து 16-ன்படி விதிவிலக்காக மருத்துவம், அறிவியல், தொழிற்சாலை பயன்பாடுகளுக்காக மட்டும் மதுவை உற்பத்தி செய்ய, விற்க, பயன்படுத்துவதற்கு உரிமம் வழங்க அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. வேறு யாருக்கும், எதற்காகவும் எந்த விதி விலக்கும் அளிக்க சட்டத்தில் இடமில்லை.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் மொத்தம் மற்றும் சில்லரை மதுபான விற்பனைக்காக இச்சட்டத்தின் கீழ் பிரத்யேக உரிமம் பெற்றுள்ள டாஸ்மாக் நிறுவனம் உரிமம் பெறாத நபர்களின் பயன்பாட்டிற்காக மதுவினை விற்பனை செய்வது இச்சட்ட விதிகளின் படி குற்றம். மேலும் சமூகத்தை சீரழிக்கும் சட்டவிரோத மது விற்பனையை இனியும் அனுமதிக்க முடியாது. எனவே உடனடியாக சட்டப்படி நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
.................................
நாகராஜ், தலைமை நிருபர்


Comments