Skip to main content

தேனியில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் ஐம்பெரும் விழா: வருவாய்த்துறை அமைச்சர் KKSSR பங்கேற்பு

தேனி, செப்.5-
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, அரசு அங்கீகாரம் பெற்று நூற்றாண்டு நிறைவு விழா, முன்னாள் நிர்வாகிகள் பணி நிறைவு பாராட்டு விழா, விருதுகள் வழங்கும் விழா மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் என ஐம்பெரும் விழா தேனி வேலுச்சாமி சின்னம்மாள் மகாலில் நடைபெற்றது. 

விழாவிற்கு மாநில தலைவர் மகேந்திரகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் தேசிங்கு ராஜன், முன்னாள் மாநில தலைவர் சண்முகராஜன் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு வந்த அனைவரையும் தேனி மாவட்ட தலைவர் கணேஷ் குமார் வரவேற்றார்.

விழாவில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.
விழாவில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு அலுவலர் ஒன்றியத்தை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவின்போது  அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் .
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 
இந்த விழாவில் நிறைவேற்றப்பட்ட 3 முக்கிய தீர்மானங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் விழாவில் பேசும் போது உறுதி அளித்தார்.
முடிவில் மாநில பொருளாளர் திலகர் நன்றி கூறினார்.
..............................
நாகராஜ், தலைமை நிருபர் 


Comments