தேனி, செப்.18-
தேனி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் பொறியாளர் தின விழா தேனியில் உள்ள தனியார் ஹோட்டலில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சங்க தலைவர் பொறியாளர் மெல்வின் தலைமை தாங்கினார்.
சங்க பொருளாளர் பொறியாளர் ரவி பாரத் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் பொறியாளர் கே.எஸ்.சரவணக்குமார் கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் சங்க முன்னாள் தலைவர்கள் பொறியாளர் தின வாழ்த்துரை வழங்கினர். விழாவில் தேனி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1.கட்டுமான பொறியாளர்களுக்கு இன்ஜினியரிங் கவுன்சில் உருவாக்க வேண்டும்.
2. கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும்.
3.கட்டுமான வரைபட அனுமதி கட்டணம் குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக கொடுக்கப்பட்டது.
................................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments