Skip to main content

தேனியில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமுதாயத்திற்கான மணமாலை நிகழ்ச்சி

தேனி, ஜூன்.30-
தேனியில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமுதாயத்திற்கான மணமாலை நிகழ்ச்சி வசந்த மஹாலில் 29.6.2025 அன்று நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஆர்.எஸ். ராஜசேகரன், தேனி மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இந்நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் பேரவை முதன்மை செயலர் கோவிந்தமணி, தலைமை பொறுப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சியின் போது 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமுதாயத்தை சேர்ந்த 8 வீடு, 16 வீட்டினை சேர்ந்த மணமகன், மணமகள் தேடுவோர் தங்களது பிள்ளைகளின் ஜாதகத்தினை பொறுப்பாளரிடம் வழங்கி தங்களுக்கான மணமகள், மணமகனை தேர்வு செய்தனர்.
நிகழ்ச்சியில் சமுதாய முக்கிய பிரமுகர்கள் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட  சமுதாய மக்கள் கலந்து கொண்டனர்.
..........................
நாகராஜ், தலைமை நிருபர் 



Comments