Skip to main content

தேனி-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரப்புகள் அகற்றா விட்டால் இந்து மக்கள் கட்சி தொண்டரணி சார்பில் நூதன போராட்டம் நடத்த முடிவு: மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் தகவல்

தேனி, ஜூன்.26-
தேனி-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்றா விட்டால்  இந்து மக்கள் கட்சி தொண்டரணி சார்பில் சாலையில் ஆடு, கோழிகளை பலியிட்டு பூஜை நடத்தும் நூதன போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் தெரிவித்துள்ளார்.   

இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனியில் இருந்து கம்பம் செல்லும் சாலையில், போடி விலக்கு வரை சாலையின் இருபுறம் சமீபகாலமாக கடைகள் புற்றீசல் போல உருவாகி வருகிறது. 
மேலும் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி பொதுமக்கள் சாலையில் சென்று வருவதற்கு இடையூறாக இருப்பதுடன் அந்த சாலையில் சென்று வரும் பஸ்கள் மற்றும் அனைத்து வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக இந்த சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இந்து மக்கள் கட்சி தொண்டரணி சார்பில் சாலையில் ஆடு, கோழிகளை சாலையில் பலியிட்டு பூஜை செய்யும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு  குரு அய்யப்பன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
..........................


Comments