தேனி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு கருவூலக்கணக்குதுறை அலுவலர் சங்கத்தின் தேனி மாவட்ட மையத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கருவூலகணக்குத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் குமார் செல்வன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கருவூல கணக்குத் துறை அலுவலர் சங்க மாநில பொருளாளர் சென்னமராஜ், தமிழ்நாடு பட்டு வளர்ச்சி ஊழியர்கள் சங்கம்.மாநில செயலாளர் விஸ்வநாதன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க தேனி மாவட்ட தலைவர் உடையாளி, மக்கள் நலபணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் சுதர்சன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சின்னசாமி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மீனா, தமிழ்நாடு ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பு மாநில கன்வீனர் அன்பழகன், தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்க மாநில செயலாளர் தேன்மொழி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தேனி மாவட்ட கருவூல அலுவலர் அருணாச்சலத்தின் ஊழியர் விரோத பழிவாங்கும் போக்கினை கண்டித்தும், தன்னுடைய சொந்த புத்தகத்தை விற்பதற்காக அதை வாங்காத ஊழியர்கள் மற்றும் அதற்கு கட்டுப்படாத ஊழியர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படும் மாவட்ட கருவூல அலுவலர் அருணாச்சலத்தினை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். முடிவில் கருவூலகணக்குத்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஜோசப் தன்ராஜ் நன்றி கூறினார்.
............................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments