தேனி அல்லிநகரம் நகராட்சியில் வீட்டு வரி விதிப்பு செய்ய லஞ்சம் எதிர்பார்த்து ரசீது போடுவதில் காலதாமதம் : இந்து மக்கள் கட்சி மாநில தொண்டரணி துணைத்தலைவர் குரு ஐயப்பன் குற்றச்சாட்டு
தேனி, மார்ச்.3-
தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதி மக்களிடம் இருந்து நகராட்சி நிர்வாகம் சொத்து வரி குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி காலியிட வரி, குத்தகை வரி, தொழில் வரி, குத்தகை வரி மற்றும் கடை வாடகை மூலம் வருவாய் ஈட்டி வருகிறது.
இந்நிலையில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரியை தானாக செலுத்த முன்வரும் பொதுமக்களிடம் லஞ்சத்தை எதிர்பார்த்து வரி விதித்து ரசீது வழங்குவதில் காலதாமதம் செய்து நகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பீடு செய்யும் அதிகாரிகள் மீது தமிழக அரசு மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஏற்பட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி மாநில தொண்டரணி துணைத் தலைவர் குரு ஐயப்பன் வெளியீட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Comments