தேனி, அக்.13-
தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு சார்பில் முனைவர் க.கருத்தப்பாண்டி எழுதிய தமிழ்ச்சிங்கம் பசும்பொன் தங்கம் என்ற நூல் அறிமுக விழா தேனி வெஸ்டர்ன் காட்ஸ் ஹோட்டலில் 13.10.2024 அன்று நடைபெற்றது.
விழாவிற்கு தேனி பன்முகமேடை பதிப்பக நிறுவனர் விசாகன் தலைமை தாங்கினார். வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அன்னபிரகாஷ், அகில இந்திய பார்வர்டு பிளாக் தேனி மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி, தேனி மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர், மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் எம்.கே.எம். முத்துராமலிங்கம் நூலை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார் விழாவின் போது கோவில்பட்டி சிந்து முருகன் கன்ஸ்ட்ரக்சன் பொது மேலாளர் க.கருத்தப்பாண்டி நூலினை ஏற்புரை செய்தார்.
விழா நிகழ்ச்சியை தேனி வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் நாணயம் சிதம்பரம் தொகுத்து வழங்கினார். விழாவில் தேனி தமிழ் சங்க மாவட்ட தலைவர் பொன்முடி, அகில இந்திய பார்வர்டு பிளாக் தேனி மாவட்ட தலைவர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments