Skip to main content

ஆண்டிபட்டியில் கெட்டுப்போன உணவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம்: உணவு பாதுகாப்பு மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் நடவடிக்கை

தேனி மாவட்ட. கலெக்டர் ஷஜீவனா அவர்களின் உத்தரவின் படி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராகவன் ஆலோசனையின் பேரில்  ஆண்டிப்பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள வணிக மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜனகர் ஜோதிநாதன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் (பொறுப்பு) சூரியகுமார் ஆகியோர் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது வணிக மற்றும் உணவகங்களில் காலாவதியான உணவு பொருட்கள், செயற்கை வண்ண பொடிகள் சேர்க்கப்பட்ட மற்றும் கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 


மேலும் பிளாஸ்டிக் கவர்கள் 16 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் அழிக்கப்பட்டது. அதுபோல கெட்டுப்போன மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் வைத்திருந்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தலா ரூ.1000 வீதம் 5 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை மூலம் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பிளாஸ்டி கவர்கள் பயன்படுத்திய வகையில் ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.500 வீதம் 6 கடைகளுக்கு ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது .

சசிதுரை, சிறப்பு நிருபர் 

Comments