தேனி மாவட்டத்தில் சிவசேனா கட்சியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு எஸ்.பி.,-யிடம் கோரிக்கை
கூட்டத்தில் அடுத்த மாதம் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை மிக சீரும், சிறப்புமாக நடத்துவது என்றும், தேனி மாவட்டத்தில் சிவசேனா கட்சியில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது என்றும், தேனி அல்லிநகரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ வீரப்ப அய்யனார் திருக்கோவில் நந்தி சிலை விசயத்தில் சிவசேனா கட்சியினர் தலையிடக்கூடாது என்று தொலைபேசி மூலம் மாநில செயலாளர் குரு ஐயப்பன் அவர்களை மிரட்டும் விதமாக பேசிய தி.மு.க பிரமுகருக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, இளைஞரணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பாளர் முருகவேல் நன்றி கூறினார்.
இதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலத்திற்கு அனுமதி, பாதுகாப்பு வழங்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.சீனிவாசன், உதவி ஆசிரியர்



Comments