Skip to main content

விநாயகர் சதுர்த்தி கமிட்டி பொறுப்பாளர்கள் விரதம் இருந்து சிலை ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டும்: தேனியில் நடந்த இந்து எழுச்சி முன்னணி வார வழிபாடு நிகழ்ச்சியில் முடிவு

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு நிகழ்ச்சி 27.8.2023 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட பொதுச்செயலாளர் மாய.லோகநாதன் தலைமை தாங்கினார். இந்து எழுச்சி முன்னணி தேனி நகர தலைவர் செல்வபாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வழிகாட்டினர். நிகழ்ச்சியில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


தீர்மானம் (1) தேனி மாவட்டம் முழுவதும் இந்து எழுச்சி முன்னணி சார்பாக நடத்தக்கூடிய விநாயகர் ஊர்வலத்தை மாவட்ட காவல்துறையின் வழிகாட்டுதலோடு அமைதியான முறையில் நடத்துவது என்றும் 

தீர்மானம் (2) விநாயகர் சதுர்த்தி கமிட்டி பொறுப்பாளர்கள் அனைவரும் விரதமிருந்து ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும்

தீர்மானம் (3) விநாயகர் கமிட்டி பொறுப்பாளர்கள் தினசரி சந்தித்து  விநாயகர் புராணம் விநாயகர் அகவல் வாசிக்க வேண்டும் என்றும்

தீர்மானம் ( 4) நிலவின் தென் துருவத்தில் சந்திராயன்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தி புதிய சரித்திர சாதனை புரிந்த நமது பாரத விஞ்ஞானிகளுக்கும்.நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிய பகுதிக்கு கோடான கோடி இந்துக்கள் வழிபடும் தெய்வங்களின் திருநாமமாகிய "சிவசக்தி" என்று பெயர் சூட்டி இந்து தர்மத்தின் பெருமையை நிலவிலும் நிலைநாட்டிய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சிவக்குமார், நிர்வாக ஆசிரியர்

ராதாகிருஷ்ணன், நிருபர் 

Comments