Skip to main content

Posts

குரும்பாகவுண்டர் இன மக்களுக்கு வருகின்ற தேர்தல்களில் MLA., MP., சீட் கொடுக்கும் கட்சிகளுக்கு ஆதரவு: தேனி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு

தேனி, டிச.7- தேனி மாவட்ட குரும்பாகவுண்டர் இன மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கிருஷ்ண பக்தர் கனகதாசரின் 525-வது ஜெயந்தி விழா தேனி இன்டர்நேஷனல் ஹோட்டலில் 7.12.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு டான்பெட் முன்னாள் மாநில தலைவர் எல்லப்பட்டி முருகன் தலைமை தாங்கினார். தர்மா பவுண்டேஷன் இயக்குனர் ரவி முன்னிலை வகித்தார். ஆடு வளர்ப்பு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இயக்குனர் வனக்குழு முருகன் வரவேற்றார். கூட்டத்தில் அகில இந்திய பழங்குடியினர் நிறுவன தலைவர் வக்கீல் விஜயன் பார்த்தசாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தமிழ்நாடு குரும்பர் பழங்குடி முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் உதகை செங்குட்டுவன், ராசிங்காபுரம் அழகர்ராஜா, அரசு ஒப்பந்ததாரர் பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மணிகண்டன், மகளிர் குழுவை சேர்ந்த ராம்ஜி ஸ்ரீ ஆனந்த சாய் அன்னதான சேவை இயக்குனர் விஜயலட்சுமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரலட்சுமி செல்வம் உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  தேனி மாவட்டத்தில் குரும்பா கவுண்டர் இன மக்கள் சமுதாயம் சார்பில் வீரபாண்டியி...

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு: அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியினர் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, டிச.5- அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு 4.12.2025 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முதன்மை பொதுச் செயலாளர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட செயலாளர் லாசர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட செயலாளர் ஜெரால்டு, தேனி மாவட்ட போதகர் அணி செயலாளர் மாறன், மதுரை மாவட்ட பேராயர் இன்பராஜ், தேனி மாவட்ட செய்தி தொடர்பாளர் பாஸ்கரன், தென் மண்டல செயலாளர் எடிசன், இளைஞரணி மாவட்ட செயலாளர் பிரேம்குமார், ஈரோடு பேராயர் ஜான் வெஸ்லி, தேனி நகர செயலாளர் கணேஷ் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ .ஆர்) பணியை நிறுத்த வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.  தனியார் பல்கலைக்கழகம் உருவாக்கும் சட்ட திருத்தத்தை திரும்பப் பெற பெறக்கூடாது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஷிப்ட் முறையில் இயங்கும் பாடப்பிரிவினை ரத்து செய்து விட்டு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ரெகுலர் பயிற்சி முறையில் கல்லூரி இயங்க வழிவகை செய்...

திண்டுக்கல்-குமுளி ரயில் பாதை திட்டத்தை; 2 திட்டமாக பிரிக்க வேண்டும்: போராட்டக்குழு தலைவர் R.சங்கரநாராயணன் பேட்டி

தேனி, டிச.5- திண்டுக்கல்-குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் தேனி-போடி ரோட்டில் உள்ள கிருஷ்ணா பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ் வளாகத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு போராட்டக்குழு தலைவர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் போராட்டக்குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தின் போது தேனி மாவட்டத்தின் ரயில் சேவை தேவைகள் குறித்து, டெல்லி சென்று ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்து, திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்த ஏற்கனவே முடிவு செய்துள்ளபடி, பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.  இதனைத்தொடர்ந்து போராட்டக் குழு தலைவர் சங்கரநாராயணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவிக்கையில், திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில் பாதை திட்டம் செயல்படுத்த ரூ.25 ஆயிரம் அல்லது ரூ.30 ஆயிரம் கோடி தேவைப்படும். அதனால் திண்டுக்கல்- லோயர்கேம்ப் வரை ஒரு திட்டமும், லோயர்கேம்ப்-சபரிமலை என மற்றொரு திட்டமும் என திண்டுக்கல் குமுளி அகல ரயில் திட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். அப்படி பிரித்து செய்தால் திண்டுக்கல்- லோயர்க...

தேனியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா: ரூ.6.31 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்

  தேனி, நவ.3- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 3.12.2025 அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. 43 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6,31,674 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலை இவ்விழாவில் மாவட்ட கலெக்டர்  தெரிவித்ததாவது,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் சுயமாகவும் தன்னிச்சையாகவும் செயல்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள் அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஊன்றுகோல் சக்கர நாற்காலி மூன்று வாகனம், ஸ்மாட் போன்கள் டெஸ்சி பிளேயர், காதொலி கருவி, பேட்டரி வீல் சேர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி. தேனி மாவட்டத்தில் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்புக்கல்வி விளையாட்டு பிஸியோதெரபி பயிற்சி மற்றும் தொழிற்பயிற்சி வழங்குவதற்காக 4 சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வ...

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்; நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி., கோரிக்கை

தேனி, நவ.3- நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவற்றில் 3.12.2025 அன்று திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதில் நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி., பேசுகையில், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 5 இந்திய தொழிலாளர்கள், மாலியில் உள்ள ஒரு தனியார் மின் நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வந்தனர். 6.11.2025 அன்று அவர்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து பயங்கரவாதிகள் அவர்களை கடத்தி சென்றனர். இதுவரை அவர்களது நிலை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்; அவர்கள் உயிருடன் உள்ளார்களா, அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதையும் அறிய முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள்.  எனவே அவர்களை மீட்டு, பாதுகாப்பாக இந்தியாவிற்கும், அவர்களின் குடும்பத்தினரிடமும் கொண்டு வருவதற்கு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென நான் வலியுறுத்...

தேனியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்: மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது.

தேனி, டிச.3- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 212.2025 அன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. முகாமில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர்  தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் நடைமுறைக்கு வரப்பெற்று. தேனி மாவட்டத்தில் உள்ள 198.ஆண்டிபட்டி, 199.பெரியகுளம், 200.போடிநாயக்கனூர், 201கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 4.11.2025 முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (Booth Level Officer) இல்லம் தோறும் சென்று. கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யப்பட்டு, வாக்காளர்களால் விவரங்கள் பூர்த்திசெய்யப்பட்ட பின்னர் படிவங்களை திரும்ப பெற்று, இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தற்பொழுது, வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் 11:12.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங...

தேனியில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா அன்று விழிப்புணர்வு குதிரை பேரணி

தேனி, நவ.28- தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு தேனி அருகே உள்ள வீரபாண்டியில் வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி ஏற்பாட்டில் தேனியில் முதன்முறையாக  முன்னிட்டு பொது மக்களை கவரும் வகையில் விழிப்புணர்வு குதிரை பேரணி 27.11.2025 அன்று நடைபெற்றது. இந்த பேரணியை வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது வீரபாண்டி பேரூராட்சி திமுக செயலாளர் செல்வராஜ், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். இந்த பேரணியானது முத்துதேவன்பட்டி, பழனிசெட்டிபட்டி, தேனி பழைய பேருந்து நிலையம், பங்களாமேடு என சுமார் 30 கிலோ மீட்டருக்கு மேல் குதிரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த குதிரை பேரணியை பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.  .......................... நாகராஜ், செய்தி ஆசிரியர் 

தேனி மனிதநேய காப்பகத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

  தேனி, நவ.28- தேனி அருகே கோடாங்கிபட்டியில் உள்ள மனிதநேய காப்பகத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா 27.11.2025 அன்று கேக் வெட்டி, காப்பக குழந்தைகளுக்கு உணவு மற்றும் புத்தாடைகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கினார். தேனி திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ராஜன் வரவேற்றார். போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் முன்னிலை வகித்தார்.  நிகழ்ச்சியில் வழக்கறிஞர் நிஷாந்த், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாசித் ரஹ்மான், கண்ணன், முகமது ரபீக், ஊஞ்சாம்பட்டி கிளை செயலாளர் ஸ்டாலின், காப்பக நிர்வாகி பால்பாண்டி உள்பட பலர் கலந்து பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அயலக அணி நிர்வாகிகள் செய்திருந்தனர். ........................ நாகராஜ், செய்தி ஆசிரியர் 

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு: தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, நவ.25- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 24.11.2025 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா தலைமை தாங்கினார்.  மாவட்ட தலைவர் வேந்தர் பாலா, மாவட்ட பொருளாளர் வீரா ராமச்சந்திரா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய, இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஆண்டிபட்டி தாலுகா, கண்டமனூர் புதுக்குளம் கண்மாய் மற்றும் நீர் வழித்தடங்களில் தனியார் நிறுவனத்தினர் அமைத்துள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தை அகற்ற வேண்டும்.  தேனியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.  தேனி மாவட்டத்தில் தனியார் ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் விபச்சார குற்ற செயலில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும்.  தேனி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளக்கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். பெரியகுளம், ஆண்டிப்பட்டி பகுதியில் வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோர...

கம்பம் அருகே மணற்படுகை பகுதி முல்லை ஆற்றில் கரை உடைப்பை சரி செய்ய வேண்டும்: பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு

தேனி, நவ.25- தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங்கிடம் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஐந்து மாவட்ட தலைவர் மனோகரன், கெளரவ தலைவர் சிவமணி ஆகியோர் தலைமையில் விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,  தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கம்பம் அருகே சுருளிப்பட்டி கிராமத்தில் உள்ள மணற்படுகை பகுதியில் முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் பிரிக்கப்பட்டு அப்பகுதியில் கடந்த 1985-ம் ஆண்டு தலைமதகு அமைத்து அங்கிருந்து உத்தமபாளையம் பரவு கால்வாய், பி.டி.ஆர் கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி செய்யப்படுகிறது.  அந்த தலைமதகு அமைந்த இடத்தில் தெற்குப் பக்கத்தில் முல்லைப் பெரியாற்றில் கிழக்கு கரையில் 8 மீட்டர் அகலத்திற்கு, 60 மீட்டர் நீளத்திற்கு உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சுமார் 100 ஏக்கரில் வாழை காய்கறிகள், நெல் உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.  இந்த சேதத்தின் மதிப்பு சுமார் ரூ.40 லட்சத்திற்கு மேல் இருக்கும். தற்சமயம் அந்த ஆற்றின் கரை உடைந...