கோவை வ.உ.சி பூங்காவில் மாலை வேலையில் பொழுதை கழிக்க குடும்பத்தினர் குழந்தைகளுடன் கூடியதை பார்த்து இருப்போம், ஆனால் பாருங்க, இப்ப பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் தத்தம் வேலைகளை விட்டு முகநூல் வாயிலாக, எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான சென்னை நர்மதா, பெண் என்ற அமைப்பை தொடங்கி சமூகத்தில் விழும்பு நிலையில் உள்ளவர்களையும், சமுதாயத்தில் பாதிக்கபட்ட பெண்களுக்கு உதவி கரம் நீட்டி அவர்களை வாழ்வில் மேம்பட பல உதவிகளை செய்து அதனை வெளிச்சம் போட்டு காட்டாமல் நற்பணிகள் செய்து வரும் அமைப்பில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளதாக தெரிவித்தனர்,
முதன் முதலில் சென்னை மெரினா கடற்கரையில் பெண் அமைப்பின் முதல் அழைப்பை ஏற்று ஆயிரம் பெண்கள் ஒன்றினைந்தனர். அன்று தொடங்கிய கூட்டமைப்பு கூட்டம் பல்வேறு மாவட்டங்களில் பெண்கள் சங்கமம் நடத்தி உள்ளனர்.

இந்நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள வ.உ.சி பூங்காவில் பெண் அமைப்பினர் சார்பில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்று கூடிய பெண்களை ஒருங்கிணைத்த கோவை மைதிலி, திருப்பூர் தேவி ஆகியோர் தலைமை தாங்கினர். எழுத்தாளர் நர்மதா முன்னிலை வகித்தார்.
நிகழ்வில் நூற்றுக்கணக்கான பெண்கள் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து வந்து இருந்தனர்.
இதில் பெண் அமைப்பின் தலைவியான எழுத்தாளர் நர்மதா தான் எழுதிய பெண் அரசியல் என்ற புத்தகத்தை வெளியீட்டு பேசுகையில், அரசியலிலும், ஆட்சியிலும் பெண்கள் வெறும் வெற்று காதிதமாக தான் பேசி வருக்கிறார்கள். பெண்களும் முன்னர் இந்த உலகை ஆண்டு உள்ளனர், அந்த காலத்தில் பெண்கள் பாதுகாக்கபட்டனர், ஆனால் இன்று பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் தான் நாடு உள்ளது. இதனை போக்க தான் இந்த பெண் என்ற அமைப்பை கடந்த 5 ஆணடுகளுக்கு முன்பு முகநூலில் ஆரம்பித்து இன்று இதில் 20 ஆயிரத்திற்க்கும் அதிகமான பெண்கள் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர்.
அவர்களாக ஒவ்வொரு மாவட்டத்தில் பொது இடத்தில் ஒன்றினைந்து,'இதுபோன்று மனமகிழ் கூட்டம் கூட்டுவோம் அதில் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு நேரில் சென்று தேவையான உதவிகள் செய்து தருவது அவர்கள் மீண்டும் வெளியில் தைரியமாக வாழ நம்பிக்கை யூட்டி முன்னேற உதவி புரிந்து வருகிறோம் என்றார்,
இதனைதத்தொடர்ந்து பெண் அமைப்பின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மைதிலி கூறுகையில், எங்களின் பெண் அமைப்பில், அனைத்து தரப்பு பெண்களும் உள்ளனர். பெண்களின் பிரச்சனை நியாயமாக இருந்தால் அவர்களுக்கு நேரில் சென்று உதவுகிறோம். இதுதவிர, அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவுகிறோம். தற்போது ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். மேலும் 100 பேச்சாளர்களை தயார் செய்து வருகிறோம். எல்லாமே, சரிபாதி ஆண், பெண் பாகுபாடுயின்றி சரிசமம் என சட்டம் உள்ளது. அதை முழுமையாக அமல்படுத்த வைப்பதே எங்கள் இலக்கு. பொது வெளியில், பெண்களுக்கு நடக்கும் அநீதிக்கு, அவர்களின் பயம் மட்டுமே காரணம். அதை தவிர்க்க, பெண்கள் தைரியமாக வெளியில் வந்து பேச வேண்டும். அதை போக்கவே பெண் அமைப்பு செயல்படுகிறது என்று கூறினார்.
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பாற்ற தற்போதைய சூழலில், உங்களை போன்ற சமூக அக்கறை கொண்ட பெண்களை தான் இந்த சமுதாயமும் நாடும் எதிர் பார்த்து ஏங்கி நிற்ககிறது
சீனிவாசன், உதவி ஆசிரியர்
Comments