தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் "வாரந்தோறும் கோயில் செல்வோம்" "உழவார பணி செய்வோம்"என்ற தலைப்பில் 1.10.2023-ம் தேதி முதல் தேனி பெரியகுளம் ரோட்டில் அமைந்துள்ள சந்தை மாரியம்மன் திருக்கோயிலில் முதல் வார உழவாரப்பணி செய்யப்பட்டது. இந்த தூய்மை பணி இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட தலைவர் இராமராஜ் ஆலோசனையின்படி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த பணியில் மாவட்ட செயலாளர்கள் இராமமூர்த்தி, சோலைராஜன், வெங்கலபாண்டி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்ரேசர் சக்திவேல், தேனி நகர செயலாளர் அரண்மனை முத்துராஜ், நகர பொருளாளர் நாகர்கோவில் ராஜேஷ்குமார், நகர துணை தலைவர்கள் நாகராஜ், சிவா மற்றும் நகர துனை செயலாளர்கள் இராம்குமார், கனகு பாண்டி, ,ரெங்கராஜ், இந்து ஆட்டோ எழுச்சி முன்னணி நகர தலைவர் செந்தில்குமார் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கோவில் அறங்காவலர்கள் கண்ணதாசன், கிருஷ்ணசாமி நாககுமார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். மேலும் அல்லிநகரம் சிவனடியார் குழு உறுப்பினர் சுப்புராஜ் இந்த பணியின் போது உடனிருந்தார்.
ராதாகிருஷ்ணன், நிருபர்



Comments