தேனி, ஜூலை.1 - தேனி பென்னிகுவிக் லயன்ஸ் கிளப் என்ற பெயரில் புதிய லயன்ஸ் கிளப் தொடங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் ஏற்பாடு தேனி தெய்வா ஹோட்டலில் 30.6.2025 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் டாக்டர் வி.ஆர்.ராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் லயன்ஸ் கிளப் PMJF இன்ஜினியர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு லயன்ஸ் கிளப் செயல்பாடுகள், சேவைகள் மற்றும் உறுப்பினராக சேர்வதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தின் போது இந்த தேனி பென்னிகுவிக் லயன்ஸ் கிளப்பில் உறுப்பினராக தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்புகளை சேர்ந்த நிறுவனர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். .................................. நாகராஜ், தலைமை நிருபர்
Publisher of the Website : Nagaraj Kamudurai