தேனி மாவட்டத்தில் பெண்கள் நலன் காக்கும் வகையில் தொழில் தொடங்க கடனுதவிகளை வழங்கி, பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உதவி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் "நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இந்த தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆண்டிபட்டி பேரூராட்சிக்க உட்பட்ட பாப்பம்மாள்புரம் பகுதியில் வசித்துவரும் அமுதா என்ற பெண் தனது கணவணை இழந்து தனது 2 ஆண் குழந்தைகளுடன் என்ன செய்வது என தெரியாத நிலையில் யாரும் உதவிட முன்வராத சூழ்நிலையில் தனக்கு தெரிந்த அடிப்படை தையல் தொழிலை சிறிய அளவில் மேற்கொண்டு தனது குழந்தைகளை படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது 48 வது வயதில் ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சூவிங் டெக்னாலஜி பிரிவில் சேர்ந்து நவீன தொழில்நுட்ப தையல் பயிற்சி 1 வருட பயிற்சி பெற்றார். கல்வி பயின்ற சான்றிதழ் மூலம் மாவட்ட தொழில் மையத்தை அனுகி கனரா வங்கி மூலம் ரூ.75,000-- கடன் உதவி பெற்று சிறிய அளவில் நடத்தி வந்த தையல் தொழில் இன்று 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்கும் அளவிற்கு இந்த நவீன தொழிற் பயிற்சி கல்வி மாற்றியுள்ளது. கைத்தொழில் கற்பதன் மூலம் தனக்கென வருமானத்தை உருவாக்கி கொண்டு தனது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தி கொள்ள முடியும் என்பதற்கும் 48 வயதிலும் கல்வியை கற்று சுயதொழில் தொடங்கி முன்னேற முடியும் என்பதற்கும் ஆண்டிபட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று இன்று தொழில் முனைவோராக உள்ள அமுதா அவர்களே சான்றாக உள்ளார்கள். மேலும் அமுதா அவர்கள் புதிய நிறுவனங்களை தொடங்கி மென்மேலும் வளர்ந்து பெண்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும்.
தொழிற்பயிற்சி மேற்கொண்டதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அமுதா அவர்கள் தெரிவிக்கையில், 2012 ஆம் ஆண்டு எனது கணவர் மாரடைப்பால் மரணமடைந்தார். உறவினர் உதவியால் தையல் தொழில் கற்றதன் மூலம் மாதம் 3 ஆயிரம் வரை மாத வருமானம் கிடைத்தது. ஆண்டிபட்டி மகளிர் தொழிற் பயிற்சி நிலையம் பற்றி அறிந்து அங்கு தொழிற் திறன் பயிற்சி கற்றதன் காரணமாக கனரா வங்கி மூலம் ரூ.75,000ஃ-- கடன் உதவி பெற்று தொழிலை சிறப்பாக நடத்தி இதன் மூலம் மாதம் ரூ.20,000 வருமானம் கிடைக்கிறது. என் வாழ்க்கை தரத்தை உயர்த்திய தமிழ்நாடு அரசுக்கும், ஆண்டிபட்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தொகுப்பு:-
இரா.நல்லதம்பி,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
தேனி மாவட்டம்
எம்.எஸ்.மகாகிருஷ்ணன்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
தேனி மாவட்டம்
Comments