Skip to main content

தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

தேனி, ஜூலை.1-

தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளராக பதவி வகித்து வருபவர் ஏகராஜா. இவர் பொம்மையகவுன்டன்பட்டி பகுதியில் உள்ள நகராட்சி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் இதற்கு முன்பு வேலை பார்த்த இடங்கள் மற்றும் தேனி அல்லிநகரம் நகராட்சியில் வேலை செய்வதற்கிடையே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக  சென்னையில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையில் கடந்த மாதம் 26-ம் தேதி  வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

அதனடிப்படையில் தற்போது பொம்மையகவுண்டன்பட்டி யில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 
தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் ஏகராஜா தற்போது  சென்னையில் இருக்கும் நிலையில் நகராட்சி ஊழியர்களை வரவழைத்து அவரது வீட்டை திறந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
...........................

பாண்டியன், உதவி ஆசிரியர்



Comments