Skip to main content

தேனியில் வேலை வாய்ப்பு முகாம்: 70 பேருக்கு பணிநியமன ஆணை

 

தேனி, மார்ச்.2-

தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகா சபா, தேனி கம்மவார் சங்க கல்வி நிறுவனங்கள், ஈக்வெட்டாஸ் டெவலப்மெண்ட் இனிசியடிவ் ட்ரஸ்ட் சார்பில் தேனி N.R.T நகரில் செயல்பட்டு வரும் கம்மவார் சங்கம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் 1.3.2025 அன்று நடைபெற்றது.
இந்த முகாமிற்கு தமிழ்நாடு ஆர்ய வைசிய மகா சபா மாநில தலைவர் கோம்பை ராமசுப்பிரமணி, மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், மாநில பொருளாளர் குமரேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

தேனி மாவட்ட ஆர்ய வைசிய மகா சபா மாவட்ட தலைவர் தண்டாயுதபாணி, மாவட்ட செயலாளர் வெங்கடேசன், முன்னாள் மாநில தலைவர் கஸ்தூரி ரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இந்த நிகழ்வில் கம்மவார் சங்க தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் தமிழ்நாடு ஆரிய வைசிய இளைஞரணி மாநில தலைவர் ராஜேஷ் குப்தா, செயலாளர் மகாதேவன், பொருளாளர் நாகா கார்த்திக், ஈக்குவிடாஸ் டெவலப்மென்ட் இனிசியடிவ் டிரஸ்ட் நிர்வாகி குணசேகரன், தேனி வாசவி கிளப் தலைவர் சரவணன், செயலாளர் பால நடராஜன், பொருளாளர் இந்ரஜித் வாசவி கிளப் வனிதா தலைவி ஷர்மிளா பொருளாளர் வைஷ்ணவி, வாசவி கிளப் ஜாயின்ட் பி.ஆர்.ஓ சுவாதி ஸ்ரீ, ஆண்டிபட்டி வாசவி கிளப் தலைவி மைத்ரேயி, முன்னாள் தலைவர்கள் லால் பகதூர் சாஸ்திரி  சத்யநாராயணன், ராம்குமார், நாகராஜன், சரவணன், நாகராஜ், கார்த்திக், DPO ஸ்ரீ வித்யா பாலாஜி மற்றும் ஆண்டிபட்டி வாசவி கிளப் நிர்வாகிகள், தமிழ்நாடு ஆரிய வைசிய மகிளா விபாக் மாவட்ட தலைவி லதா மணிகண்டன், செயலாளர் ஷ்யாமலட்சுமி,  பொருளாளர்  சாகித்யா உள்பட நிர்வாகிகள், 50-க்கும் மேற்பட்ட நிறுவனத்தினர் மற்றும் வேலை நாடுனர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் பார்மஸி, ஸ்பினிங் மில், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், நிதி நிறுவனம், நகைக் கடைகள் என 50-க்கும் மேற்பட்ட தமிழகத்தின் தலைசிறந்த நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் 250-க்கும் மேற்பட்ட வேலை நாடுனர்கள் பங்கேற்றனர். இவர்களில் 70-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சேகர் செய்திருந்தார். அதுபோல ஜாப் உத்சவ் திட்டத்தின் திட்ட தலைவர்கள் சதீஷ் பாபு, சமுத்ரா ராஜ்குமார், சிவக்குமார் ஆகியோர் வேலை வாய்ப்பு முகாமிற்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தனர். 

நாகராஜ், செய்தி ஆசிரியர் 


..........................


Comments