Skip to main content

தேனி அரசு மருத்துவ கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: 214 பேர் பங்கேற்றனர்

தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு  விழா-2023-ஐ கொண்டாடும் வகையில்  தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா 16.9.2023 அன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி தேனி மாவட்டத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மருத்துவச் சான்று, தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,  உதவி உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் தொடர்பான கோரிக்கை குறித்து பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான உதவி மையம் போன்ற பல்வேறு விதமான சேவைகள் வழங்கப்படுகிறது.மேலும் இந்த சிறப்பு முகாமிற்கு வருகை வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ  பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பிற சேவைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது  என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.

இந்த முகாமில் 66 நபர்களுக்கு அடையாள அட்டை பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளது. 42 நபர்களுக்கு முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டைகளும், 132 நபர்களுக்கு ரயில் மற்றும் பேருந்து பயண அட்டைகளையும், 89 நபர்களுக்கு தேசிய தரவுத்தள அட்டை (UDID Card) வழங்கப்பட்டுள்ளது. 1 நபர்களுக்கு புதிய ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கான 201 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 214 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்பட மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்  பலர் கலந்து கொண்டனர்.

சீனிவாசன், உதவி ஆசிரியர் 

Comments