Skip to main content

தேனியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு கருப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜை

தேனியில் 184-வது உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு தேனி அருகே உள்ள பி.சி.பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அணை கருப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜையும், உறுப்பினர்களின் நலன் வேண்டி பொதுமக்களுக்கு அன்னதானமும் 31.8.2023 அன்று நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தேனி மாவட்ட தலைவர் செல்வகுமார் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார். அதுபோல சங்க நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள்  வழங்கினர். இ‌ந்த நிகழ்ச்சியில் தேனி புகைப்பட கலைஞர் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர் நலச் சங்கத்தின் ஆலோசகர் சிவக்குமார், தலைவர் ரஞ்சித். துனைத்தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் காளிதாஸ், பொருளாளர் சிவமூர்த்தி, துணை செயலாளர் ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் வைகை சதிஸ், ராஜா, திருமலை,சதிஸன், ராஜேஷ், ராஜாஜி, ராயல் குமார் ,செந்தில், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சீனிவாசன், உதவி ஆசிரியர்


Comments